"சங்கத்தமிழன்" ரஜினி படங்களைப் போல் மாசாக இருக்கும் - விஜய்சந்தர்..!

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு “சங்கத்தமிழன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்சேதுபதி முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
`சங்கத்தமிழன்' படத்தின் படப்பிடிப்பிற்காக வரும் 20-ந்தேதி சென்னை வருகிறார். இந்த படத்தில் வசனங்கள் அனைத்தும் ரஜினி படங்களைப் போல் மாசாக இருக்கும் என விஜய்சந்தர் சொல்லியிருந்தார்.
இப்படத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். நாசர், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
