சகோதரனுடன் இணைந்து நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார்...

நடிகர் சரத்குமார் மூத்த சகோதரரான சுதர்ஷன் சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் பலியானார். அவருடைய மகன் ராம்குமார், 2018ம் ஆண்டு அறிமுக இயக்குநர் அருண்காந்த இயக்கிய 'கோக்கோ மாக்கோ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அருண்காந்த அடுத்து இயக்கியுள்ள 'இந்த நிலை மாறும்' திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'லைம் லைட் பிக்சர்ஸ்' தமிழில் தயாரிக்கும் திரைப்படம் "கலர்ஸ்". சில தினங்களுக்கு முன்பு, இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.
நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர், நடிகைகளை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கிய நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் "கலர்ஸ்". இவர் மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோக்கோ மாக்கோ' திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான ராம்குமார், 'கலர்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் அவருடைய சித்தப்பா மகளும், சகோதரியான வரலஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இப்படத்தில் இனியா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான S.P.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ப்ரசாத் பாரபுரம் கதை எழுத, வைரபாரதி பாடல்கள் எழுத, S.P.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். சஜன் கலதில் ஒளிப்பகிதிவு செய்ய, விஷால் படத்தொகுப்பினை செய்துள்ளார்.
இப்படத்தை நிஜார் இயக்க, 'லைம் லைட் பிக்சர்ஸ்' சார்பாக ஆஷி இட்டிகுலா தயாரித்துள்ளார்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.