Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கோவாவில் கல்யாணம். தயாராகிறது சமந்தா _ நாகசைதன்யா ஜோடி

•On August 6, 2017
samantha 1
Share
samantha 1 நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதையடுத்து இவர்களுக்கு அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அக்டோபர் 6-ந் தேதி முதல் 9-ந் தேதிவரை 4 நாட்கள் திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன. சமந்தா கிறிஸ்வத மதத்தை சேர்ந்தவர் என்பதால் 8-ந் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கிறது. அதன்பிறகு இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் குறித்து சமந்தா கூறும்போது, “எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். சிறந்த கதாநாயகி என்பதை விட சிறந்த பெண் என்ற பெயர் வாங்கவே நான் விரும்புகிறேன். இதற்காகத்தான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.