Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகும் போலீஸ் கமி‌ஷனர்!..

•On March 17, 2017
police
Share
police கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வருகிற 22-ந்தேதி நேரில் ஆஜராவார் என ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு பல வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, இந்த சொத்து வரியை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மையில் உள்ளதால், தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால், தகுந்த பாதுகாப்பினை சென்னை போலீஸ் கமி‌ஷனர் வழங்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் 2ந் தேதி உத்தரவிட்டார்.ஐகோர்ட்டின் உத்தரவின் படி மனுதாரர் பொன்.தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலுடன், போலீஸ் கமி‌ஷனருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை அவர் வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, போலீஸ் கமி‌ஷனருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 மாதங்களாகியும் அதை போலீஸ் கமி‌ஷனர் அமல்படுத்தாமல் உள்ளார். போலீஸ் கமி‌ஷனரே உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், கீழ் நிலை அதிகாரிகள் எப்படி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மதிப்பு கொடுப்பார்கள்? எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும். அவர் நேரில் ஆஜராவாரா?அல்லது ஆஜராக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?’ என்று கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து கருத்து கேட்டு தெரிவிப்பதாக கூறினார். சிறிது நேரத்துக்கு பின்னர்,‘மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார். இதன்படி நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி, 2 கூடுதல் அட்வ கேட் ஜெனரல்கள், கூடுதல் போலீஸ் கமி‌ஷனர்கள் தாமரைகண்ணன், சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு, 2 துணை கமி‌ஷனர்கள், 6 உதவி கமி‌ஷனர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் பலர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.