கோரிக்கையை நிராகரித்த ஆளுநர், ஆட்சிக் கலைப்புக்கு அடுத்த ரூட் ரெடி!

அதிமுக பிளவுபட்டது முதலே தமிழக நிர்வாகம் முடங்கிவிட்டது. தமிழகத்தின் உரிமை பிரச்சனைகளில் டெல்லியின் விருப்பப்படியே தமிழக அரசு செயல்படுகிறது.
இது தமிழக மக்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஆளுநர் அப்படியெல்லாம் உத்தரவிட முடியாது என கைவிரித்துவிட்டார்.
ஸ்டாலின் கேள்வி:-
இந்நிலையில் சேலத்தில் இன்று திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் பந்து என் கையில் இல்லை என் கூறியிருக்கிறார். 89 எம்.எல்.ஏக்களுடன் திமுகவின் பந்து இருக்கிறது. இந்த பந்தை கொண்டு வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் இந்த பேச்சுகள் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடியே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்களோ?
மக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
