கொம்பனின் மாமனார் ஆனார் மஞ்சப்பை தாத்தா..!

மஞ்சப்பை படத்தில் விமலின் தாத்தாவாக ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதராக நம்மை எல்லாம் தனது நடிப்பால் உருகவைத்தார் நடிகர் ராஜ்கிரண். இப்போது அடுத்ததாக கொம்பன் படத்தில் கார்த்திக்கு மாமனாராக, அதாவது லட்சுமி மேனனுக்கு அப்பாவாக நடிக்கிறார்.
‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கும் இந்தப்படத்தில் லட்சுமி மேனனின் பெயர் பழநி. பொதுவாக நமது தமிழ்சினிமாக்களில் அதிகம் காட்டப்படாத மாமனார்-மருமகன் உறவின் மேன்மையை இந்தப்படத்தில் காட்டப்போகிறார்களாம். கார்த்திக்கு இந்தப்படம் புது அனுபவமாக இருக்கும் என்றுதான் தெரிகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
