Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் விரைவில் அறிமுகம்!..

•On March 17, 2017
galaxy-s8-release-date
Share
galaxy-s8-release-date சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் விரைவில் சீன சந்தைகளில் வெளியிடப்பட உள்ளது.சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் சீனாவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. 6 ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் இந்த பதிப்பு சீனாவில் மட்டும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும் கேலக்ஸி C9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிட்டது. தென் கொரியாவில் கேலக்ஸி S8 முன்பதி ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கனடா சந்தையில் கேலக்ஸி S8 விற்பனை ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி S8 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.8 இன்ச் QHD 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இன்டெர்னல் மெமரியுடன், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி S8 விலை ரூ.64,900 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட நோட் 7 பேட்டரி பிழை காரணமாக வெடித்து சிதறியதால் விற்பனையில் இருந்து திரும்ப பெறப்பட்டது.தற்போது அறிமுகமாக உள்ள இந்த கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் மக்களிடையே சிறப்பான வகையில் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.