Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கேரளா மாடல் அழகியை ‘பிசாசு’ஆக மாற்றினார் மிஸ்கின்..!

•On August 25, 2014
Pisasu
Share

இயக்குனர் பாலா தயாரிக்க, தான் இயக்கும் "பிசாசு" படத்தில் ஏகப்பட்ட புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர் மிஷ்கின்.’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் ரமேஷின் தம்பி இந்தப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த பிராயாகா மார்ட்டின் என்பவர் நடிக்கிறார். இவர் நடித்த ஒரு விளம்பர படத்தை பார்த்துவிட்டுத்தான் யாவருக்கு இந்த கதாநாயகி வாய்ப்பை வழங்கியுள்ளார் மிஷ்கின்.

இதுதவிர அருண் என்பவர் இசையமப்பாளராகவும் ஜெயஸ்ரீ ஆர்ட் டைரக்டராகவும் அறிமுகமாகிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் குருகுலத்தில் பயின்ற ரவிராய் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர். இதுதவிர தமிழ் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவரான தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப்படத்தில் பாடல் எழுதுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.