Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கூட்டணி சர்ச்சை : ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் வைகோ..!

•On November 28, 2018
vaiko-3
Share

திமுக கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், விசிக கட்சிகள் உள்பட எந்த கட்சியும் இப்போதைக்கு இல்லை என்றும், தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாட்டிற்கு பின்னரே கூட்டணி அமையும் என்றும் சமீபத்தில் துரைமுருகன் கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், திமுகவுடன் உறவு நீடித்து வருவதாகவும், மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி நிச்சயம் அமையும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் திமுக கூட்டணியில் விசிக இருப்பதாக திருமாவளவன் கூறவில்லை. அதேபோல் இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோமா? இல்லையா? என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று வைகோ கூறினார். வைகோ இதனை தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் ஸ்டாலினிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்திக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 4 மணி அளவில், இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.