Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குழந்தை பட்டாளங்களுடன் டிசம்பர் 29 அன்று வருகிறது ஒரு பேய் படம்...

•On December 27, 2017
Sanguchakkaram
Share
Sanguchakkaram அறிமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில், கே.சதீஷ் மற்றும் வி.எஸ்.ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'சங்குசக்கரம்'. இப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல ஸ்டான்ட் மாஸ்டர் திலிப் சுப்ராயன் மற்றும் 'புன்னகை பூ' கீதா நடித்துள்ளனர். இப்படத்தில் குஹந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா, பிரதீப்,ஜெர்மி, நிஷேஷ், மோனிகா, அபிநேத்ரா, ஸ்வக்ஷா, கிரிதிக், ஆதர்ஷ், பாலா, ஆதித்யா, தேஜோ, அஜீஷ் என ஒரு டஜனுக்கும் மேலான குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக குழந்தைகள் நையாண்டி செய்யும் ஒரு பேய் படம் தான் இந்த 'சங்குசக்கரம்'. இதை பற்றி இயக்குனர் சொல்லும்போது, இப்படத்தில் ஆரம்பம் முதல் படம் முடியும் வரை குழந்தைகளின் அட்டகாசம் அதிகளவில் இருக்கும் என தெரிவித்தார். சாதாரணமாக் மக்கள் பேய்கள் மீது ஒரு அபிப்ராயம் வைத்திருப்பார்கள், அந்த அபிப்ராயத்தை ஒடிக்கும் விதமாக இதுவரி வந்த பேய் படங்களுக்கு மாறாக ஒரு வித்யாசமான கதைக்களத்தில் இந்த படத்தை உருவாகியதாக இப்படத்தின் இயக்குனர் மாரிசன் தெரிவித்தார். இப்படத்திற்கு ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பினை கையாண்டுள்ளார். ஷபீர் இசை அமைக்க, மாரிசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த மாதம் 29'ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.