Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குறும்படங்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ‘லிட்டில் ஷோ அவார்ட்ஸ்’

•On June 23, 2014
little
Share
little திரைப்படங்களுக்கு விருது வழங்க எத்தனையோ விருது குழுக்கள் உள்ளன. ஆனால் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து முதன்முறையாக விருது வழங்கியது லிட்டில் ஷோ அவார்ட்ஸ். 2௦13-ஆம் ஆண்டே சிறிய அளவில் இந்த விழாவினை நடத்திய இந்நிறுவனம், இந்த ஆண்டு தயாரிப்பாளர் ‘லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகர் உதவியோடு மிகப்பெரிய அளவில் நடத்தியது. 1௦௦-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டன. இதில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2௦ படங்கள் விழா நாளான நேற்று திரையிடப்பட்டன. இதில் இருந்து சிறந்த 3 படங்கள், சிறந்த நடிகர், இயக்குனர், நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிற்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சினிமாவில் கூட கண்டு கொள்ளப்படாத சிறந்த லொகேஷன் விருது மற்றும் சிறந்த வசனங்களுக்கான விருது ஆகியவை கூட இந்த விழாவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இடையிடையே சூப்பர் சிங்கர், ‘அது இது எது’ குழுவினரின் காமெடி, நடனம் என பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும். இதில் குட்டிமா என்ற திரைப்படத்திற்கு 3 விருதுகள் வழங்கப்பட்டன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.