Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்க தேனி செல்லும் முதல்வர் பழனிசாமி !

•On March 12, 2018
edappadi-palanisamy
Share
edappadi-palanisamy குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்கவும் மீட்புப் பணிகளை பார்வையிடவும், இன்று மாலை முதல்வர் தேனி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. காட்டுத் தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த 6 பேரும், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதி காட்டுத் தீயில் 37 பேர் சிக்கினர். இதில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். நல்ல நிலையில் மீட்கப்பட்டவர்களில் 10 பேர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்திக்கவும் மீட்புப் பணிகளை பார்வையிடவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தேனி செல்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.