கிராமத்து காதலை அழகாக பேசும் சீமத்துரை..!

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியானாலும் அவை அத்தனையும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவதில்லை. வலுவான கதையும் நடிப்பும் இருந்தால் மட்டும் தான் மக்களின் வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது அழகான கிராமத்து காதல் கதையில் உருவாகியுள்ள படம் சீமத்துரை. இந்த படத்தை சந்தோஷ் தியாகராஜன் என்பவர் இயக்க E.சுஜய் கிருஷ்ணாவின் புவன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
கீதன் நாயகனாக நடிக்க, 96 படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடித்துள்ளார். ஜோஸ் பிராங்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சரிதாவின் தங்கையும் பிரபல நடிகையுமான விஜி சந்திரசேகர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நான் மகான் அல்ல படத்தில் நடித்திருந்த மகேந்திரன், கயல் படத்தில் நடித்திருந்த வின்சென்ட் ஆகியோர் ஹீரோவான கீதனுக்கு நண்பர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி, பொரி உருண்டை சுரேஷ், நிரஞ்சன் ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டி. திருஞான சம்மந்தம் என்பவர் ஒளிப்பதிவு செய்ய, வீரா செந்தில் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குனரான மரகத நாணயம், உறுமீன் ஆகிய படங்களில் பணி புரிந்திருந்த பாசார் என்.கே.ராகுல் என்பவர் இப்படத்திலும் பணி புரிந்துள்ளார்.
நடன இயக்குனராக சந்தோஷ் முருகனும் ஸ்டண்ட் மாஸ்டராக டேன்ஜர் மணி என்பவரும் பணி புரிந்துள்ளனர். சரிகமப நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை அதிகமான விலைக்கு வாங்கியுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.