Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர் போராட்டம்..

•On April 2, 2018
a7213955ccbbfe56c7398a59bd4d5c4a
Share
சென்னை: காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கி கடந்த மார்ச் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 30 இடங்களில் மறியல் சென்னையில் 30 இடங்களில் திமுக மற்றும் தோழமை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர், திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சைதையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் அண்ணாசாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலை திமுகவினர் மறித்தனர். எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம் காவிரி வாரியம் அமைக்கக் கோரி பல இடங்களில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் அஞ்சல் நிலையத்தை பூட்டி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை மறித்தும்  எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.