Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"காலா" படத்தை தியேட்டருக்கு சென்று ரசித்த பாஜக தலைவர் தமிழிசை..!

•On June 8, 2018
9b46c4fe97f4db08e7b2a98ac95692d6
Share
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவர் நடித்த 'காலா' திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பாஜக வுக்கு எதிரான கருத்துக்கள் மறைமுகமாக இருப்பதால் இந்த படம் வெளியானதில் இருந்து ரஜினி, பாஜக ஆதரவாளர் என்ற பிம்பம் மாறி வருகிறது. இந்த படத்தின் வில்லன் கேரக்டரே கிட்டத்தட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் கேரக்டர் போல் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெர்சல் படத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் இந்த படத்தை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் உள்ள திரையரங்கில் 'காலா' படத்தை தனது கட்சி நிர்வாகிகளுடன் ரசித்து பார்த்தார். 'காலா' படம் குறித்து அவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இதுகுறித்து வெளியான டுவீட்டுக்களை அவர் ரீடுவீட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நேரடியாக ஏதாச்சும் தாக்கி பேசி இருக்காரா? மக்களின் மனநிலை எப்படி இருக்கு என்பதை வாட்ச் செய்ய போய் இருப்பார் போலிருக்கு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.