காலா படத்தின் "செம்ம வெயிட்டு" பாடல் நாளை வெளியீடு..!

மெட்ராஸ், கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாகபஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் மே 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், "செம்ம வெயிட்டு" என்கிற ஒரு பாடல் மட்டும் நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
