Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காலா செய்வது தவறு என்றால்! கமலா செய்வதும் தவறு தானே..!

•On June 6, 2018
kaala2jpg
Share

வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள  ரஜினி நடித்துள்ளார். இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

கர்நாடகாவில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது வடபழனி கமலா திரையரங்கம் "காலா" திரைப்படத்தை திரையிட மாட்டோம் என கூறியுள்ளனர். கமலா திரையரங்கமேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு காலா படத்தின் கட்டணம் அதிகம் என்றும் அதனை திரையிட்டால் நிர்வாகம் பல குழப்பங்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.

கமலா நிர்வாகம் சொல்வது சரி என்று வைத்து கொண்டாலும், இப்படி கட்டண உயர்வை பற்றி பேசும் இவர்கள் ஏன் தங்கள் திரையரங்கில் மட்டும் அரசு சொன்ன கட்டணம் இல்லாமல் மிதிவண்டிக்கு 10 ருபாய் வாங்க வேண்டிய கட்டணத்தை ஒரு மணி நேரத்துக்கு 10 ருபாய் கட்டணம் என்று அதிக வாங்குகின்றனர் என்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. இது பல தரப்பட்ட மக்களின் குரலாக கூட  இருக்க கூடும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.