"காதலிக்க நேரமில்லை" பட நடிகரின் மூத்த மகன் உடல் நலகுறைவால் மரணம் !

1964-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இவரின்tamil இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கோலிவுட்டில் மறக்க முடியாத நடிகராக தடம் பதித்தவர்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் பிசினஸ்மேனான மூத்தமகன் பாலாஜி (50), சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று சென்னையில் காலமானார்.
இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று மாலை அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
