Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காணாமல் போன கட்டப்பா மார்ச் 17 அன்று காட்சியளிக்கிறார்!

•On February 24, 2017
Kattappava Kaanom
Share
Kattappava Kaanom யாருடா இந்த 'காட்டப்ப'? எங்க, எப்போது காணாம போனாரு?? அப்பிடின்னு யோசிக்குறீங்களா??? அட, மணி சியோன் இயக்கி, சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த ஜீவா ஒளிப்பதிவு செய்ய இறுதியாக பசக்...பசக் என சதீஷ் சூர்யா கத்திரி போட்டு படத்தொகுப்பை செய்து இப்போது வெளியாகும் தருவாயில் உள்ள படத்தின் பெயர் தான் "கட்டப்பாவ காணோம்" என்கிற திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாகவும் ஐஸ்வரியா ராஜேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் முழுவதுமாக முடிவுற்று திரைக்கு வெளிவர தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீட்டாளர் 'ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ்' இப்படம் வருகிற மார்ச் மாதம் 17'ஆம் தேதி இப்படம் உலகெங்கும் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். "கட்டப்பாவ காணோம்" திரைப்படம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் இப்படத்தின் விளம்பரம் ஆடியன்ஸ் பார்வையில் ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. மார்ச் 17'ஆம் தேதி வெளியாகும் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என நம்புவோம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.