காஜல் அகர்வாலை இயக்கும் "சிவலிங்கா" பட இயக்குநர்!

தல அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் 'மெர்சல்' மற்றும் 'க்யூன்' தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழில் இன்னும் நடிக்க பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறார்.
மேலும், 'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து நாயகியை மையப்படுத்திய த்ரில்லர் கதை ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் பி.வாசு. இதற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
காஜல் அகர்வாலும் நடிக்க சம்மதம் தெரிவிக்க, அவரோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
