Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் கமல்ஹாசன்..!

•On June 21, 2018
actor-kamal
Share

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பதிவிற்காக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை இதற்காக தேர்தல் ஆணையர் அலுவலகம், கட்சி விவரங்களை வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தியின் இல்லத்தில் வைத்து சந்திப்பு நடைபெற்றது. இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார். ஆனால் என்ன மாதிரியான விஷயங்கள் உரையாடினார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். அவரது உடல்நிலை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்க இருக்கிறார்கள்.

இன்று மேலும் சில காங்கிரஸ் தலைவர்களை கமல் சந்திக்க வாய்ப்புள்ளது. சில நாட்கள் முன்பு கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தார் கமல். அவரது அரசியல் பயணம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.