காங்கிரஸ் கட்சித்தலைவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்லா சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் உடனடியாக டெல்லிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வயிறு வலி பிரச்சினை தொடர்பாக சோனியாகாந்திக்கு சிகிக்சை அளிக்கப்படுவதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ராணா கூறியுள்ளார்.
சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுட் பாய்சன் காரணமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
