Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கற்றது தமிழை விட அதிகமான உணர்வை ஜிப்ஸி வெளிப்படுத்தும் - நடிகர் ஜீவா..!

•On May 23, 2019
gypsy_8181xx
Share

ஜிப்ஸி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் ஜீவா,

"ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான் இருப்பேன். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன்.

ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்னைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்காக நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான்.

ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராமின் கற்றது தமிழ் படம் எப்படி உணர்வை வெளிப்படுத்தியதோ, ஜிப்ஸி அதைவிட அதிகமான உணர்வை வெளிப்படுத்தும்.

ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி’’ என்று ஜீவா பேசினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.