'கருப்பன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாமல் இருந்தது படக்குழு.
தற்போது ஜல்லிக்கட்டு மாட்டை விஜய் சேதுபதி பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். தான்யா நாயகியாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
-https://youtu.be/vVJkGHNxFD0Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
