"கபாலி" 35 நொடி டீசர்! அப்பப்பா!! பிரமாண்டம்!!!

ரஜினிகாந்த் நடித்து, 'அட்டக்கத்தி' ப.ரஞ்சித் இயக்கி, V கிரியேஷன்ஸ் சார்பாக கலைபுலி S.தாணு தயாரித்து வரும் படம் "கபாலி". ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அணைத்து சினிமா விரும்பிகளின் எதிர்பார்ப்பில் இருக்கிறது இந்த "கபாலி". இப்படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். ரஜினி மகளாக தன்சிகா பணியாற்றியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவிற்க்கிறது.
நேற்று இப்படத்தில் இடம்பெறும் "நெருப்புடா" என்னும் பாடலின் 35 நொடி வீடியோ டீசர் வெளியிடப்பட்டது. 35 நொடிகள். அப்பப்பா! என்ன ஒரு அமர்க்களம்... அந்த பீஜ்ஜியம், அந்த கம்பீரமான நடை, உடை, எப்பவுமே ரசிக்க வைக்கும் அவரின் ஸ்டைல். அட்டகாசம்.
வகிடு எடுத்து தலைவாரிய அழகில் அவர் கைகளை ஓங்கும் காட்சி பிரமாதம். முத்தாய்ப்பாக சோபாவில் அவர் அமரும் காட்சி....ரஜினி ரஜினிதான்.
" கபாலி"....லீ....லீ, "தீ" போல பவர்புல் பிரைட்....அடுத்து நிமிடங்கள் ஓடும் டிரைலருக்கு ஆவலாக "கபாலி" ரசிகர்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
