கன்னடத்தில் அறிமுகமாக இருக்கும் எமி...

நமது சினிமா துறையில் திறமை மட்டும் இருந்தால் போதாது கூடவே நம்ம ராசியும் நல்லா இருக்கனும் இருந்தா அது எங்கயோ கொண்டு போய்டும் அப்படி போனவங்கள ஒருத்தர்தான் நம்ம எமிஜாக்சன்.
அதாவது ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருகிறார். குறிப்பாக, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்த எமி, அவரது அடுத்த படமான 2.ஓ படத்திலும் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதனால் ஷங்கர் படத்தில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் எமிஜாக்சன். மேலும், தற்போது 2.ஓ படத்தை அடுத்து ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வரும் எமிஜாக்சன், அதைத் தொடர்ந்து தி வில்லன் என்றொரு கன்னட படத்திலும் நடிக்கிறார். எமி ஜாக்சன் முதல்முறையாக நடிக்கும் இந்த கன்னட படத்தில், சிவராஜ்குமார், நான் ஈ சுதீப் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். பிரேம் இப்படத்தை இயக்குகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
