Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"கத்துக்குட்டி" பட நாயகிக்கு ரசிகர்களின் பாராட்டு !

•On March 19, 2018
sristi
Share
sristi நடிகை ஸ்ருஷ்டி டாங்கே செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. நரேனுடன் சேர்ந்து அவர் நடித்த "கத்துக்குட்டி" படம் மீண்டும் ரிலீஸாகியுள்ளது. கன்னக்குழி நடிகை என்று அழைக்கப்படும் அவரை பற்றி ஒரு கிசுகிசு பரவியதால் மார்க்கெட் பாதிக்கப்பட்டது. அது குறித்து விளக்கம் அளித்த பிறகு வதந்தி அடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 2 மணிநேரத்தில் 30 கிலோமீட்டர் தொலைவை சைக்கிளில் கடந்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே . இதை புகைப்படங்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் சைக்கிளில் 30 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றதை  வீடியோவாக பதிவு செய்த  ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். ஸ்ருஷ்டியின் சைக்கிள் பயணம் குறித்த ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். 30 கிலோமீட்டர் வரை தான் சைக்கிளில் சென்றதை ஸ்ருஷ்டியாலேயே நம்ப முடியவில்லை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.