‘கத்தி’ டீமை அலர்ட் பண்ணிய அர்னால்ட்...!

‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்குத்தானே ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வந்துட்டுப்போனார்.. அதுகூட விழா முடிவதற்குள் பாதியிலேயே கிளம்பிவிட்டாரே.. அப்படி இருக்கையில் அவருக்கும் ‘கத்தி’ டீமுக்கும் என்ன சம்பந்தம், அப்படி என்ன அலர்ட் பண்ணினார் என குழம்பவேண்டாம்..
‘ஐ’ விழாவில் அவர் பாதியிலேயே கிளம்பி போனார் அல்லவா..? அதற்கு காரணம் ‘ஐ’ விழா 5.30மணிக்கெல்லாம் ஆரம்பிக்கும் என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது.. ஆனால் விழா தொடங்கியதோ ஏழு மணிக்கு மேல்.. மேடையில் தான் பேசியதும் தனது புரோட்டகாலின்படி விழாவுக்காக ஒதுக்கிய நேரம் முடிந்துவிட்டதால்தான் அர்னால்ட் கிளம்பிவிட்டார். ‘ஐ’ விழாக்குழுவினரின் தாமதத்திற்கு சரியான சவுக்கடி கொடுத்த மாதிரி இருந்தது அர்னால்டின் செய்கை.
அதனாலேயே என்னவோ நேற்று நடைபெற்ற ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் என ஜாம்பவான்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையிலும் கூட, விழாவை அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடி சரியாக ஏழு மணிக்கே ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்யும் சரியான நேரத்துக்கு வந்துவிட்டார். ஆக அர்னால்டின் அதிர்ச்சி வைத்தியம் நன்றாகவே வேலை செய்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
