Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கதாநாயகி ஆத்மியாவை பாராட்டும் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ்!

•On October 26, 2017
Nandu-En-Nanban-Launch-30
Share
 , Nandu-En-Nanban-Launch-30 ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் 'நண்டு என் நண்பன்' படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படப்பிடிப்பில் அவருடைய ஒத்துழைப்பு குறித்து படக்குழுவினர் மட்டுமல்ல இயக்குனரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆத்மியாவை பற்றி இயக்குனர் ஆண்டாள்  ரமேஷ் கூறியதாவது : " 'மனம் கொத்திபறவை' படத்தில் நடித்த ஆத்மியாவை ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளோம். டிரஸ், ஹோட்டல், கார், உணவு, எல்லாமே கம்பெனி கொடுத்ததை ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வந்து முழு ஒத்துழைப்பு தந்த நடிகை ஆத்மியா இன்றைய சினிமாவிற்கு இவரை போன்ற நடிகைகள் இருந்தால் தயாரிப்பாளருக்கு பேருதவியாக இருக்கும்" என்றார். ஜித்தன் ரமேஷ் நாயகனாகவும், ரிச்சர்ட் வில்லனாகவும் ஆத்மியா கதாநாயகியாகவும் நடிக்க மேலும் இதில் முருகதாஸ், சந்தானபாரதி, அனுமோகன், சாந்தினி ஆகியோரும் நடித்து வரும் இந்த படம் துரிதமாக வளர்ந்து வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.