Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கஜா புயல்: கேரள முதல்வரிடம் அன்பு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்..!

•On November 27, 2018
02CHSKOKAMAL
Share
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழகத்திற்கு கேரள மின் ஊழியர்களை அனுப்பியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான உதவிகளையும் அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழத்திற்கு உதவி செய்யுமாறு கமல்ஹாசன் இன்று கேரள முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது: அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டாங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி கேரள அரசியனையும், மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும். கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்டும் பயிர்கள் சேதாரமடைந்து மரங்கள் வேருடன் சாய்ந்து படகுகளை இழந்து, மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாலம். அதுதான் இன்று, இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.