கங்காருவை ரட்சிக்க வந்த ‘கலைப்புலி தாணு’

உயிர், மிருகம், சிந்துசமவெளி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் சர்சைகளுக்கு பஞ்சமில்லாத இயக்குனர் சாமி இயக்கியுள்ள படம் தான் ‘கங்காரு’. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, பாசமலர் படம் போல அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் சாமி.
படம் முடிந்தும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இந்தப்படத்தை தற்போது கலைப்புலி தாணு வாங்கி வெளியிடுகிறார். ஒரு படம் ஓடுகிறதோ இல்லையோ, தாணு வாங்கிவிட்டார் என்றால் படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே..
இந்தப்படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, நீண்ட நாட்களாக நடிப்பைவிட்டு ஒதுங்கியிருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
முதல் முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். நாகராஜசோழன் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
 ,
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
