Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படம்: மாஃபா பாண்டியராஜன் தகவல்

•On March 26, 2017
mapa
Share
mapa மாஃபா பாண்டியராஜன் நாளை ஓபிஎஸ் அணியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. சசிகலா அணி, அதிமுக அம்மா என்ற பெயரில்,போட்டியிட, ஓபிஎஸ் அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் போட்டியிடுகிறது. மறுபுறம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் இறங்கியுள்ளார். இந்தநிலையில், ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவரது பிரசாரத்தின்போது, நாளை தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழக மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகளான எங்களையே ஆதரிப்பார்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் கண்டிப்பாக தோல்வியடைவது உறுதி என்றும் குறிப்பிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.