ஒரு உன்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் "கங்கு"..!

ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக "கங்கு" படத்தை தயாரிக்கிறார். பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உன்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார். மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவராமன்.
பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது. 1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. மேலும் பல நிஜ லோகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.மற்றும் படத்தில் மிகப்பெரிய டெக்னிஷீயன்கள் பணிபுரிய உள்ளனர்.
பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், வடிவுக்கரசி, ஜாக்குவார் தங்கம் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
