ஐந்தாவது முறையாக சூர்யா – ஹரி அதிரடி கூட்டணி..!

ஹரி படம்னாலே சொல்லவே வேணாம் வேகம்.. வேகம்... வேகம் தான்.. ஒரு ரசிகனின் பல்ஸை சரியாக அறிந்திருக்கும் இயக்குனர் ஹரி, தனது ஒவ்வொரு படத்திலும் அதை சரியாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படங்கள் எல்லாமே வெற்றியை, சொல்லி அடிக்கின்றன.
அதைத்தான் ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2னு நான்கு படத்திலும் பார்த்தோமே.. ஒரு படம் ரிலீஸாகி இரண்டு வாரம் ஓடிவிட்டாலே மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக பேசிக்கொள்ளும் இந்த அசாதாரணமான சூழலில் ஹரி டைரக்ஷனில் சூர்யா நடித்த சிங்கம்-2 வெற்றிகரமாக நூறாவது நாளையும் தொட்டது.
கடந்த தீபாவளிக்கு விஷாலை வைத்து ஹரி இயக்கிய ‘பூஜை’ படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் மீண்டும் ஐந்தாவது முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைக்கிறார் ஹரி. இந்தப்படத்தின் கதை விவாதத்திற்காக தனது உதவி இயக்குனர்களுடன் சுவிட்சர்லாந்து கிளம்பி சென்றுள்ளார் இயக்குனர் ஹரி..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
