‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்ததால் ஹேப்பியான டைரக்டர்..

படத்துக்கு எப்படியாவது ‘யு’ சர்டிபிகேட் வாங்கிடனும்.. எதையாவது கட் பண்ணச்சொன்னாக்கூட பண்ணிடலாம் என பல இயக்குனர்களும் படத்தின் தயாரிப்பாளர்களும் அலறி துடிக்கையில் ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்ததால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறாகள் ஒரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும்.
ஆனா இங்க தமிழ்ல இல்லீங்க.. தெலுங்குல.. படத்தோட பேரு ‘ரா ரா கிருஷ்ணய்யா’. இந்தப்படத்துல ஹீரோயினா நடிச்சுருக்கவரு நம்ம ‘கேடி பில்லா...’வுல நடிச்ச ரெஜினா பாப்பாதான். தமிழ்ல பட வாய்ப்புகள் இல்லைன்னாலும் அம்மணி இப்ப தெலுங்குல ரொம்ப பிஸி.
‘ரா ரா கிருஷ்ணய்யா’ படத்துல கதாநாயகன் சுந்தீப் கிஷனோட சேர்ந்து லிப்லாக் சீன்ல மிரட்டியிருக்கிறார் ரெஜினா. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிங்க மிரண்டுபோய் இந்த சீனை வெட்டுனாத்தான் ‘யு’சர்டிபிகேட் தருவோம்னு கத்திரிய தூக்குனாங்களாம்.
ஆனா படத்துல அந்த சீன் முக்கியம்.. நீங்க எந்த சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லைன்னு தயாரிப்பாளரும் டைரக்டரும் கோரஸா சொல்ல, அப்புறம் என்ன சும்மாவே சென்சார் போர்டு காட்டு காட்டுன்னு காட்டும்.. இது போதாதா.. ஏ சர்டிபிகேட்டை தூக்கி கையில கொடுத்திட்டாங்க..
இத்தனைக்கும் படத்துல ஆபாசமோ, வன்முறையோ எதுவுமே இல்லையாம்.. இந்த முத்தக்காட்சி மட்டும் தானாம். அதுக்குத்தான் இந்த ஏ சர்டிபிகேட். ஆனா இதனால் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்காம். இப்ப தயாரிப்பாளரும் டைரக்டரும் ரொம்பவே ஹேப்பி அண்ணாச்சி.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
