“என் மீது கல்லெறிந்தால் அதில் வீடு கட்டுவேன்” – பிரகாஷ்ராஜ் ஆவேசம்..!

நகமும் சதையும் போலத்தான் இருந்தார்கள்.. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை.. கீரியும் பாம்புமாக சீறிக்கொண்டு இருக்கிறார்கள்.. வேறு யார் பிரபல தெலுங்கு இயக்குனர் சீனு வைத்லாவும் நம்ம பிரகாஷ்ராஜும் தான்.. பிரச்சனை கிளம்பியது ஒரு பாடலை வைத்துதான்..
சீனு வைத்லாவின் இரண்டு மூன்று படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது மகேஷ்பாபுவை வைத்து சீனு இயக்கியுள்ள ‘ஆகடு’ படத்தில் பிரகாஷ்ராஜ் இல்லை. ஆனால் தான் இல்லை என்று தெரிந்தபின்னும் படத்திற்காக ஒரு பாடலை எழுதிக்கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஆனால் அந்தப்பாடலை படத்தில் பயன்படுத்திவிட்டு பிரகாஷ்ராஜை இருட்டடிப்பு செய்துவிட்டார் சீனு.. அதுமட்டுமல்லாமல் அவரை பற்றி வேண்டாத சில வார்த்தைகளையும் உதிர்த்திருக்கிராராம் சீனு. இதைக்கேட்டு கொந்தளித்த பிரகாஷ்ராஜ், “இது அவருக்கே வெட்கமாயில்லை.. என் மீது கல்லெறிந்தால் கவலையில்லை.. அதை வைத்து நான் வீடு கட்டிக்கொள்வேன்.. என்னை எரிக்க நினைத்தால் அதைவைத்து ஒரு விளக்கை எரிய வைப்பேன்” என சீனுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
