'என்ஜிகே' சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் கட் அவுட்..!

நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்காக ரசிகர்கள் வைத்துள்ள கட் அவுட் பல நடிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்த படம் என்.ஜி.கே. இப்படம் அரசியல் தொடர்பான படம் என்பதால் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்திற்காக இந்தியாவில் இதுவரை எந்த நடிகருக்கும் வைக்காத உயரத்தில் கட் அவுட் வைக்க வேண்டும் என முடிவெடுத்த சூர்யா ரசிகர்கள் 215 அடி உயரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைத்துள்ளனர். இதற்காக ஒரு தனி விழாவை நாளை மாலை 4 மணிக்கு ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் சர்கார் படத்திற்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடி உயரத்திலும், விஸ்வாசம் படத்திற்காக திண்டுக்கல்லில் 190 அடியில் அஜீத்துக்கு கட் அவுட் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 ,
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
