Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எந்த பிரச்னைகளையும் சமாளிக்க தயார்- நடிகர் சங்க தலைவர் சவால்!

•On October 24, 2017
vishal1
Share
vishal1 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையின் ஒரு பிரிவான டிடிஎஸ் வரி குழுவினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: IT_Office_11221 நான் சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது தான் என் அலுவலகத்தில் வருமானவரித்துறையின் டிடிஎஸ் வரி சோதனை நடப்பதாக செய்தி கிடைத்தது. எனது அலுவவலகத்தில் யாரும் இல்லை. எல்லோரும் படப்பிடிப்பில் இருந்தார்கள். raja சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் எச்.ராஜா மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்தாக சொன்னார். அது தவறு என்று சுட்டிக் காட்டினேன். யாரையும் எதிர்த்து பேசவில்லை. அதற்காக இந்த சோதனை நடந்திருப்பதாக கருதவில்லை. இதை வழக்கமான நடவடிக்கையாகத்தான் கருதுகிறேன். ஒரு வேளை உள்நோக்கத்துடன் நடந்திருந்தால் அதை நான் சந்திப்பேன். Vishal நான் நேர்மையான முறையில் தொழில் செய்கிறேன். நேர்மையான முறையில் வரி கட்டுகிறேன். அதனால் எந்த பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். இதை விட பெரிய பிரச்னை கந்து வட்டி கொடுமை தாங்காமல் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தான். அது எப்படி நடந்தது, யார் காரணம். அந்த குடும்பத்துக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து கவலைப்படுவோம் என்றார் விஷால்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.