எதிர்பாராமல் வந்தது தான் இந்த "குயின்" பட வாய்ப்பு மலையாள நடிகை சிலிர்ப்பு!

4 வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியான படம் குயின். இதில் நடித்த கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படம் "குயின்". தமிழ் மற்றும் கன்னடத்தில் "பாரீஸ் பாரீஸ்" என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பெரும்பான்மையான கதை பாரீஸ் நகரில் நடப்பதால் இந்த தலைப்பு. இதில் தமிழ் குயினாக காஜல் அகர்வாலும், கன்னட குயினாக பருல் யாதவும் நடிக்கிறார்கள். தெலுங்கு குயினாக தமன்னா நடிக்கிறார், மலையாள குயினாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இதுகுறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது:-
குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் ஒரு வடக்கன் செல்பி மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனேன். "அச்சம் என்பது மடமையடா" மூலம் தமிழுக்கு வந்தேன். சத்ரியன் படத்திலும் நடித்தேன். தற்போது "இப்படை வெல்லும்" படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் பெரிய ஹீரோக்கள், பெரிய படங்களில் நடித்திருக்கிறேன்.
இப்போது குயின் ரீமேக்கிலும் நடிக்கிறேன்.காஜல் அகர்வால், தமன்னா நடிக்கும் ஒரு கேரக்டரில் நானும் நடிக்கிறேன் என்பதை நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. இந்த கேரக்டருக்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டது எனக்கு தெரியும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கே கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தென்னிந்திய மொழிகளில் குயின் வெளிவரும்போது யார் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்ற ஒப்பீடு கண்டிப்பாக வரும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
