Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்-நடிகர் மன்சூர் அலிகான்..!

•On May 5, 2018
maxresdefault_16320
Share

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன்.

கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

 ,

மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டி கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.