எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6 காப்பர் நிற ஸ்மார்ட்போன் விலை மற்றும் வெளியீட்டு தேதி!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6 காப்பர் நிற ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஜூலை 10-ந்தேதி வெளியிடப்படுகிறது. எனினும் இந்த மாடலின் விற்பனை ஜெனரிக் மற்றும் ஆர்ட் பிளாக் நிறங்களின் விற்பனை துவங்கி ஒரு மாதத்திற்கு பின்னரே துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 காப்பர் நிற 32 ஜிபி மாடல் அன்லாக் செய்யப்பட்ட மாடல் அமெரிக்காவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டும் முன்பதிவு செய்து வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் ஆகஸ்டு 18-ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நோக்கியா 6 காப்பர் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
நோக்கியா 6 காப்பர் நிற பதிப்பு அமெரிக்காவில் 229.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,886 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு விநியோகம் செய்யப்பட மாட்டாது என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
