Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

X வீடியோஸ் - படம் எப்படி..!

•On June 2, 2018
xxx
Share
பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் X வீடியோஸ். சமூக மற்றும் பெண்கள் விழிப்புணர்வுக்கு தேவையான இந்த படத்தில் அஹிருதி சிங், ரியாமிக்கா, அஜய் ராஜ், அபினவ் மஹாஜித், நிஜய், பிரபுஜித், ஷான், அர்ஜுன் போன்ற புதுமுகங்கள் சஜோ சுந்தரின் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள். காமம் என்பது ஒரு கலை அது பேசும் பொருளாக இருந்து காட்சிப்பொருளாக மாறியுள்ள இந்த தலைமுறைக்கு தேவையான ஒரு படம் X வீடியோஸ். கால மாற்றத்தால் மனிதனின் சிந்தனை ஓட்டமும் மாறி காமம் என்ற அழகான விஷயம் வெறியாக மாறியுள்ளது. இந்த வெறி சமூகத்தையும், சமூகத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கையும் எப்படி சீரழிக்கிறது என்பது விளக்குகிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் மனோஜ் பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் அவரை ஆபாச வீடியோக்கள் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுத சொல்கிறார். அந்த கட்டுரையை எழுதுவதற்காக சில ஆபாச வீடியோக்களை பார்க்கிறான். ஆனால் எதிர்பாராத விஷயமாக அதில் தனது நண்பனின் மனைவியின் ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைகிறான். இங்குதான் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. தான் பார்த்த ஆபாச வீடியோ குறித்து நண்பனிடம் கூற அந்த வீடியோவை எடுத்தது தான் தான் என நண்பனும் அதிர்ச்சியளிக்கிறான். ஆனால் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த வீடியோ எப்படி வெளியானது என்பது அவனுக்கு தெரியவில்லை. இந்நிலையில் அந்த நண்பன் தற்கொலை செய்துகொள்ள இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்ற தேடலுடன் படம் நகர்கிறது. தனது வேறு சில நண்பர்களின் உதவியுடன் அந்த தேடலில் மனோஜுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி ரகம். மேலும் இவர்களுடன் தற்க்கொலை செய்துகொண்ட நண்பனின் மனைவி அஹிருதி சிங் இணைந்து இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என முயற்சிக்கிறார்கள். ஆபாச இணையதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துவிட்டால் அதனை அழிக்கவே முடியாது. அடுத்தடுத்து மற்ற இணையதளங்களுக்கு அந்த வீடியோ போய்க்கொண்டே இருக்கும். மேலும் டவுன்லோட் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என படம் முழுக்க பல அதிர்ச்சி தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
நம்முடைய ராகசியங்கள் எப்படி திருடப்படுகிறது. நம்மைப்பற்றி முழுத்தகவலும் எப்படி கசிகிறது. நம்முடைய தனிமனித பாதுகாப்பு குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதை படம் அழகாக உணர்த்துகிறது. நம்மை அறியாமல் எப்படியெல்லாம் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்படுகிறது போன்ற பல விழிப்புணர்வுகள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆபாசபடம் என்பது வேறு பாலுறவு என்பது வேறு பாலுணர்வு என்பது ஒரு கலை, அது அழகானது, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. ஆனால் ஆபாச படம் என்பது வெறி, வக்கிரம் நிறைந்தது, தனி மனித ஒழுக்கத்தை சீரழிக்கும் ஒரு போதை அது. ஒரு பெண் ஆபாசப் படமாக இணையத்தில் சிக்கிவிட்டால், அவளத வாழ்க்கையும், அவளது அடுத்தடுத்த தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். எளிமையான திரைக்கதை, கதையோடு ஒன்றித்திருக்கும் ஜோகனின் பின்னணி இசை, வின்செண்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவு, ஆனந்தலிங்க குமாரின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு கூடுதல் பலம். இன்றைய தலைமுறைக்கு தேவையான இந்த படம் நிச்சயம் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். மொத்தத்தில் X வீடியோஸ் பார்க்கவேண்டிய படம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.