Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஊரடங்கு தளர்வு ! இரண்டு நாட்களுக்கு பின் தலைப்பு வெளியீடு !!

•On May 13, 2020
Sabari
Share

இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் தங்களது படைப்பைப் பற்றி பேசும்போது,

"கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் காரணமாக பல பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா துறையில் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு 144 தடை உத்தரவை தளர்த்தி சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான ரீ ரிக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளைத் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ரீரெக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 18-ஆம் தேதி படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கதையோடு உங்களை விரைவில் சந்திப்போம்".

இவ்வாறு இயக்குநர் சபரிநாதன் முத்து பாண்டியன் கூறினார்.

'செண்பா கிரியேஷன்ஸ்' சார்பாக செந்தில்நாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்கியுள்ள படத்திற்கு இசை மஸ்தான் காதர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.