உதயநிதியை வச்சுசெஞ்ச அந்த இருவர்..!


படத்திற்கு படம் தன்னை ஒரு சிறந்த நடிகராக மாற்றிக்கொள்ளவேண்டும் என உதயநிதி முயற்சித்து வருகின்றார். முதலில் காமெடிக்கு மட்டும் முக்கியதுவம் வாய்ந்த கதையை தேர்வு செய்தார். அதன் பின்னர் நடனத்திலும் கவனம் செலுத்தினார். தற்பொழுது ஆக்ஷன் களத்திலும் குதித்துள்ளார்.
கெத்து படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் விகராந்த் எதிர் நாயகனாக நடித்துள்ளார். இருவருக்கு கிளைமாக்ஸ் பைட் படத்தில் இருக்கிறதாம். பைட் மிக அருமையாக வரவேண்டும் என இருவரும் தங்களால் முடிந்த அளவு உழைப்பை கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரையும் அந்தரத்தில் பறக்க விட்டு மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள சொல்லியுள்ளார் பைட் மாஸ்டர். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிந்துகொண்ட உதயநிதி, "அன்பு, அறிவு மாஸ்டர் இருவரும் என்னை சண்டை போட வச்சாங்கன்னு சொல்லுறதவிட, என்ன நல்ல வச்சு செஞ்சாங்கன்னு தான் சொல்லணும்" என தெரிவித்தார்.
-Satheesh SriniComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
