Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளைய தளபதியின் 'மெர்சல்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்

•On August 9, 2017
Mersal-Vijay-Thalapathy-June-21
Share
Mersal-Vijay-Thalapathy-June-21 விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வரும் 20ஆம் தேதி, 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளன. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி, தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சிங்கள் வரத் தயாராகி விட்டது. பக்கா மாஸ்! அதன் பெயர் ஏ ஆர் ரஹ்மான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.