இளையதளபதியின் அடுத்த படத்தலைப்பு தளபதியா?...

இளையதளபதி விஜய் இயக்குனர் அட்லீ உடன் இணைந்து நடித்து வரும் படத்துக்கு 'தளபதி'என்று தலைப்பிட ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை - வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பில் 1980களில் நடைபெறுவது போன்ற காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வெளிநாட்டில் படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இப்படத்துக்கு 'தளபதி' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது படக்குழு.மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி - மம்முட்டி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தளபதி'. அந்நிறுவனம் தலைப்பு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். 'தளபதி' தலைப்பை எப்படியாவது பேசி வாங்கிவிட தீவிரம் காட்டி வருகிறார்கள்.
படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படக்குழுவினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். அதில் "'தளபதி 61' மிகுந்த முயற்சியோடும், கடின உழைப்பாலும் உருவாகிக் கொண்டிருக்கும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம். தவறான செய்திகளாலும், சில வியப்பூட்டும் செய்திகளையும் வெளியிடுவது படத்தை பாதிக்கும் செயல்களாக அமைகிறது. எனவே உரிய தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தவறாக பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபழம்பெரும் நடிகை கலைமாமணி கே.ஆர்.இந்திரா காலமானார்
Next Postகட்டப்பாவை காணோம் - விமர்சனம்
