Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘இரும்புத்திரை’ வெளியீட்டு உரிமையை வாங்கியது கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ்!

•On March 24, 2018
irumbu-thirai-movie-first-look-poster-review-feature-image-PsM5d2MKKyugGoUEYa2AG
Share

விஷால் தயாரித்து நடித்து வந்த ‘இரும்புத்திரை’ படத்தை கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. விஷால் &, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

மேலும் படத்தில் ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மக்களின் தனிப்பட்ட தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திருடி, அதை வைத்துக் கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைக்கும் பவர்புல் வில்லனை எதிர்த்து ஒரு ராணுவ வீரன் போராடுகிற கதை. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.

தற்போது இந்தப் படத்தை கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் வாங்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.