இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘நாளை முதல் வேட்பாளர்கள் அறிமுகம்’ ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக சீரியஸாக அரசியலுக்கு வருவது குறித்து பேசியதில் இருந்தே தமிழக அரசியலே பரபரப்பாகி வருகிறது.. இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் படம் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு படம் குறித்த விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ‘நாளை முதல் வேட்பாளர்கள் அறிமுகம்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவருடைய அடுத்த படம் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் டாக்டர் ராஜசேகர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
