Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிரித்விராஜ் : மோகன்லால் நடிக்கும் "லூசிஃபெர்"..!

•On March 11, 2019
37194573_536751543405997_330220613547327488_n
Share
நடிகர் பிரித்விராஜ் மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் . தமிழ் தெலுங்கு , பாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.தமிழ் சினிமாவில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமாகிய இவர் பாரிஜாதம் , மொழி , அபியும் நானும் , ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என அனைத்து பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். . இயக்குனராக இவர் இயக்கும் முதல் படம் 'லூசிஃபெர் '.  மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்   இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தளபதி விஜய் உடன்   ஜில்லா , சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் தமிழ் நடித்து இருக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால்  மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களுடன்  விவேகம் புகழ் விவேக் ஓபராய் , மாரி 2 புகழ் டோவினோ தாமஸ் , இந்திரஜித், ஜான் விஜய் ,சுரேஷ் மேனன் , கலாபவன் சாஜன் ஆகியோருடன்  பிரித்விராஜ்  கெளரவ  வேடத்தில்  நடித்துள்ளார். நடிகர் , திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி அவர்கள் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய R P பாலு இந்த படத்திற்கு வசனம்  எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு  இசையமைக்க, சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை  இயக்கம் மோகன் தாஸ் , சண்டைப்பயிற்சி ஸ்டண்ட்  சில்வா , நடனம் தினேஷ் . இத்திரைப்படம் தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம்.இந்திய அரசியல் படமாக இருக்கும் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்  அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது.இப்படத்தின்  படப்பிடிப்பு திருவனந்தபுரம் . கொச்சின், மும்பை , லட்சதீவு , பிரான்ஸ் , ரஷ்யா  ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின்  இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது .

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.