இன்று வெளியாகும் பிரபல நடிகர் படத்தின் ட்ரைலர்

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்”. "2.0" எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமய்யா, ஸ்ரீமன், பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா, நவாப் ஷா, தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து 'சும்மா கிழி' எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது .
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் T சந்தானம், சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்/ராம் - லக்ஷமன்.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "தர்பார்" படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்க, சுபாஷ்காரனுடன் இணைந்து 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரித்திருக்கிறது.
விவேக் பாடல்கள் எழுத, அனிருத் இசையமைத்திருக்கிறார். நடனத்தை பிருந்தாவும், ஷோபியும் கவனிக்கிறார்கள்.
"தர்பார்" வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
